--- --:--:-- --

டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்.,8-இல் சட்டப்பேரவை தேர்தல்

2

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை நேற்றுடன் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

 

வரும் 22ம் தேதியுடன் டெல்லி அரசின் ஆட்சி காலம் முடிவடைகிறது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஜனவரி 14ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 22ஆம் தேதி என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு பிப்ரவரி 24ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி எட்டாம் தேதி வாக்குப்பதிவு, பிப்ரவரி 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

 

இந்த அறிவிப்புக்கு முன்னதாக பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், 13,240 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

 

வாக்களிக்க வந்து செல்லும் வகையில் மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும், எனவும் அப்படியும் வர முடியாதவர்களுக்கு முதல்முறையாக வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால் வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு புதிய திட்டங்கள் இடம்பெறக்கூடாது என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon