--- --:--:-- --

தேர்தலில் தோல்வியுற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

4

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களும், குற்றச்சாட்டுக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்திகுலம், செங்குலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காசி என்பவர் தோல்வி அடைந்தார்.

 

எனினும் தோல்வியடையச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி எனவும், தான் மக்களை நம்பியதாகவும், அவர்கள் இப்படி துரோகம் செய்வார்கள் என கனவில் கூட நினைக்கவில்லை என்றும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதேபோன்று அத்திகுளம் தெய்வேந்திர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற பிரிதிவிராஜன் என்பவரும் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று போஸ்டர் ஒட்டியதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதனிடையே காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேவி மாங்குடி என்பவர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து அதிகாரிகள் தேவி வீட்டில் வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படுவதாக நோட்டீஸ் ஒட்டினர்.

Leave a Reply

Right Menu Icon