அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இர்ஃபான் பதான்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்த இர்பான் பதான் அபாரமாக பந்துவீசி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது தனது பனானா இன்சுலின் மூலம் முதல் ஓவரிலேயே ஹேட்செட் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணியாக இருந்தார்.
கபில்தேவ்க்கு அடுத்த இந்திய அணியின் அடுத்த மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என வர்ணிக்கப்பட்ட இர்ஃபான் பதான் தொடர் காயங்கள் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணிக்கு தொடர்ச்சியாக தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவு சோபிக்காத பதான் ரஞ்சி கோப்பையில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் நடைபெறும் சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 29 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பார்த்தால் 1105 ரன்கள் எடுத்துள்ளது. 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பத்தான் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.





