குடியுரிமை சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை : நடிகை கவுதமி
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை காலம் பாளையம் பகுதியில் நடிகை கவுதமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய மாநில அரசுகள் ஒற்றுமையுடன் ஒரே குரலில் பேச வேண்டும் என வலியுறுத்தினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும், பிரச்சனையும் இருக்கப்போவதில்லை என்று தெரிவித்த நடிகை கவுதமி இந்த போராட்டங்கள் தவறான புரிதலால் நடைபெறுவதாகவும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




