--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க மு.க.ஸ்டாலின் முயற்சி

5

உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது தலைவராக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

 

ராயபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக கூறினார். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதி உண்டு எனினும் போராட்டங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதற்காக தான் கல்லூரிகளுக்கு ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் உதயநிதியை எப்படியாவது தலைவராக்கி விட வேண்டும் என்பது திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon