இலங்கையில் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்திருக்கிறார்.
அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசித்ததாக தெரிகிறது. அப்போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்பது அதிமுகவின் நீண்டநாள் கோரிக்கை என்றும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்த அமைச்சர் அமித்ஷா சரியான நேரத்தில் இது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!