சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு 14.5 கோடி ரூபாய் சம்பளம் உட்பட 2,788 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. அல்பபேட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பணியாற்றிவருகிறார்.
ஜனவரி 1ம் தேதி முதல் சுந்தர்பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என அல்பபேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தவிர கூகுள் மற்றும் அல்பபேட் நிறுவனங்களின் பங்குகள் மூலம் சுந்தர் பிச்சைக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
2020ஆம் ஆண்டில் ஊதியம் மற்றும் பங்கு மூலமாக சுந்தர் பிச்சைக்கு 2,788 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை கூகுள் குரோம் மற்றும் டூல்பார் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






