பானிபூரி விற்ற சிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாற்றிய ஐபிஎல்
கண்களைக் கவரும் ஷாட்டுகளில் பந்துகளை நாலாபக்கமும் விரட்டும் இவர்தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறார். பானிபூரி விற்ற இந்த சிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக மாற்றியுள்ளது ஐபிஎல். 17 வயது வீரரான யாஷ் ஜெய்ஸ்வாலை ஐபிஎல் ஏலத்தில் 2 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் அணி.
ஜூனியர் லெவலில் இந்திய அணிக்காக விளையாடிய போதே பலரது கவனத்தையும் ஈர்த்த பெருமைக்குரியவர் இவர் அண்மையில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 12 சிக்ஸர் 17 பவுண்டரிகளுடன் 203 ரன்கள் எடுத்து பாராட்டு மழையில் நனைத்தாள்.
இதோடு மிக இளம் வயதில் 50 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தான் அவரை கோடீஸ்வரராக மாற்றியது எனலாம். மிக இளம் வயதிலேயே சாதனையாளனாக உருவெடுத்துள்ள இவரின் சிறுவயது பயணம் மிகவும் கடினமானதாகவும், லட்சியத்திற்காக முயற்சி செய்வோருக்கான மிகச்சிறந்த பாடமாகவும் இருந்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜெய்ஸ்வால் சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் அசாத்திய திறமையை கொண்டிருந்தார். இவரின் திறமையை அவரது ஏழ்மை அழித்து விடக்கூடாது என அறிந்த அவரது நலம் விரும்பிகள் ஜெய்ஸ்வால் மும்பைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனை ஏற்று 12 வயதில் மும்பைக்கு சென்று ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டே கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.
விடியற்காலையில் எழுந்து கிரிக்கெட் பயிற்சி மீண்டும் ஓட்டல்களில் வேலை என கடுமையாக உழைத்து ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களிலேயே சரிவர பணி செய்யவில்லை எனக் கூறி ஹோட்டல் உரிமையாளரால் விரட்டப்பட்டார். இதன் பின்னரும் துவளாத ஜெய்ஸ்வால் மும்பையில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து தோட்ட பணியாளர்களுக்கு சமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
கழிவறை கூட பயன்படுத்த முடியாமல் சிறிய டெண்டில் வாழ்ந்ததோடு பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் நரக வேதனையை அனுபவித்தார். இந்த சமயத்தில்தான் செலவுக்கு தந்தை அனுப்பும் காசு போததால் மைதானத்திலேயே பானிபூரி விற்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டே கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டார் ஜெய்ஸ்வால்.
பானி பூரி விற்றாலும் ஜெய்ஸ்வால் அங்கு பல இரவுகள் பட்டினியாகவே கடந்தன .இத்தனை கஷ்டங்களைக் கடந்து உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த ஜெய்ஸ்வால் தற்போது ஐபிஎல் கலக்க தயாராகிவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




