--- --:--:-- --

பயனார்களை பின் தொடரும் பேஸ் புக்

3

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின் தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும் ஃபேஸ்புக்கால் இருக்கும் இடங்களை தெரிந்துகொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

 

ஃபேஸ்புக் உலகின் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் சிசிபிஏ என்ற சட்டத்தின்படி சமூக வலைதளங்கள் பயணிகளிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக் கொள்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது.

 

அதன்படி பயனர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் லொகேஷனை பகிர்ந்து கொள்ளும் முறை ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தாலும் பயனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் அறியமுடியும் என செனட் சபையில் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

 

பயனர்களுடைய செல்போனை ஐபி முகவரியை வைத்து அவர்களுடைய லொகேஷனை ஃபேஸ்புக் கண்டுபிடிக்கிறது. விளம்பர நோக்கத்திற்காக பயனர்களின் லொகேஷனை அவர்களுக்கே தெரியாமல் எடுத்துக் கொள்வதாக கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளது. போட்டோக்களில் ட்ரேக் செய்யப்படுவது, குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அதை செக் இன்ஆக பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் மீறி பயனர்களின் ஐபி முகவரிகள் ஃபேஸ்புக் ஊடுருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon