--- --:--:-- --

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடத் தயார்! மீரட் சிறைச்சாலை ஊழியர்

10

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக மீரட் சிறைச்சாலையில் பணியாற்றும் தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் முன்வந்துள்ளார்.

 

நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திகார் சிறைச்சாலையில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு தகுதிவாய்ந்த ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி சிறை நிர்வாகம் உத்தரபிரதேச அரசிற்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த தகவலை உறுதி செய்திருக்கும் உத்தரபிரதேச சிறைத்துறை கூடுதல் டிஜிபி அனந்த்குமார் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு இரு ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி அரசிடம் கேட்டதாகவும், அதில் லக்னோ சிறையில் பணியாற்றும் ஊழியருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் மீரட்டில் மட்டும் ஒரு ஊழியர் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

 

இதற்கிடையே மீரட் சிறைச்சாலையில் பணியாற்றும் அந்த ஊழியரான செல்லாத் தனக்கு சிறை நிர்வாகம் சார்பில் எவ்வித குறிப்புகளும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அதேசமயம் குற்றவாளிகளை தூக்கிலிட தாம் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon