17 வயது சிறுவன், சிறுமிக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்
கோவையில் 17 வயது சிறுமிக்கும், சிறுவனுக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வேடப்பட்டி அடுத்த நகராஜபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமண விழா நடத்துவது வழக்கம்.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் போது திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் நடத்தப்படும். நள்ளிரவு 12 மணிக்கு இந்த திருமணங்கள் நடைபெறும்.
இந்நிலையில் தற்போது திருமண விழா நடைபெற்று வரும் நிலையில் 17 வயது சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தபோது சிறுவன், சிறுமிக்கு திருமண நிச்சயம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோரிடமிருந்து அதிகாரிகள் உறுதிமொழி கடிதம் பெற்றனர்.





