தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு 2-ம் இடம்
தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன .
இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் தமிழக அணி தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. இதனையடுத்து இரண்டாம் பரிசு கோப்பையுடன் தமிழக மாற்றுத் திறனாளி வீரர்கள் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தனர். அப்போது அவர்களை வரவேற்க அரசு தரப்பில் யாரும் வராததால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.





