அப்பாடா! ஒருவழியாக சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைத்தது – நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கடந்த ஆகஸ்டு 21இல் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு, அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
எனினும், இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில், ப. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தை ப. சிதம்பரம் நாடினார்.
அவரது மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 28ஆம் தேதி வழக்கு விசாரணைகள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது. அதில் 2 லட்சம் பிணை தொகை வழக்க வேண்டும்; சிறப்பு நீதிபதியின் அனுமதியின்றி ப.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதன் மூலம் 106 நாட்களாக சிறையில் இருந்த ப.சிதம்பரம் விரைவில் விடுதலையாகிறார்.





