--- --:--:-- --

விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு : புகைப்படங்களை வெளியிட்டது நாசா

12

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் பாகங்களை அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் கண்டறிந்துள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய இஸ்ரோ சார்பில் சந்திராயன் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.

 

அப்போது நிலவில் தரை இறங்கிய போது விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை கண்டறிய தீவிர முயற்சியில் களம் இறங்கினர். எனினும் அதன் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் தோல்வியை தழுவினர்.

 

இந்நிலையில் நிலவிற்கு நாசா அண்மையில் செயற்கை கோளை அனுப்பியது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை தற்போது நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

 

அதில் நிலவுக்கு நாசா அனுப்பிய விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை கண்டறிந்திருப்பதாக தெரிவித்து அவற்றின் புகைப்படங்களையும் பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon