--- --:--:-- --

அயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

9

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உளேமா இ இந்த் என்ற அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

 

அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த இடத்திற்கு பதிலாக இசாமி அமைப்புகள் மசூதி கட்டிக் கொள்வதற்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கில் ஒரு மனுதாரரான சன்னி வக்பு வாரியம் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கூறியிருந்தது. அதேசமயம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது.

 

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் மூல மனுதாரரான சித்திக்கும் சட்டப்பூர்வ வாரிசு தாரர்கள் மௌலான சையது என்பவர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஜாமியாத் உளேமா இ இந்த் அமைப்பின் தலைவரான இவர் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் தங்களுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

 

கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறிதான் வழக்கு தொடரப்பட்டது என்றும், ஆனால் கோவில் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் நீதிபதி தெரிவிப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் நியாயம் வென்று இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

 

இறுதி தீர்ப்பு எதிராக அமைந்திருப்பதால் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார். இதேபோல் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon