--- --:--:-- --

காதலியின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காதலன்!

6

கல்லூரி மாணவியிடம் முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்ட இளைஞர் அவரை காதல் வலையில் விழ வைத்துள்ளார். அதன் பிறகான அந்த இளைஞரின் விபரீத செயல் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

முகநூல் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகிய இளைஞர் ஒருவர் அவரது நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் இளம்பெண் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

 

இப்படி பணிபுரிந்து கொண்டே கல்லூரி படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இவருக்கு திருப்பூர் மாவட்டம் அமராவதி பாளையத்தை சேர்ந்த அஜித் என்பவர் முகநூல் மூலம் நட்பாக இருக்கிறார். அந்த நட்பு தான் நாளடைவில் பெரும் விபரீதத்தில் முடிந்துவிட்டது.

 

முகநூல் மூலம் தன்னிடம் பேசிய இளம்பெண்ணை அஜித் தனது காதல் வலையில் விழ வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் உள்ளது அந்த உறவு. அதாவது சேட்டிங்கின்போது தங்களின் நிர்வாண படங்களை இருவரும் மாற்றி மாற்றி அனுப்பி கொண்டுள்ளனர்.

 

காதலியின் நிர்வாண படங்களை பார்த்து அந்த கொடூர திட்டத்தை தீட்டி உள்ளார். காதலியின் நிர்வாண படங்களை அஜித் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நிலைகுலைந்து போய் உள்ளார்.

 

இது குறித்து தனது பெற்றோரிடம் கதறி அழுதபடியே கூறியுள்ளார். பதறிப்போன பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பிறகு காவல்துறையின் நடவடிக்கை தொடங்கியது.
அஜித் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

முகநூல் மூலம் பழகியவரை நம்பி இளம்பெண் தனது நிர்வாணப் படங்களை அனுப்பியதும் அதனை இளைஞர் சமூக வலைதளங்களில் பரவவிட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon