ஒரு கிலோ துவரம் பருப்பு 130 ரூபாய்க்கு விற்பனை!பொதுமக்கள் அதிர்ச்சி!
வெங்காயத்தை தொடர்ந்து துவரம் பருப்பின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த அறுவடை செய்யப்படும் துவரம்பருப்புகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக துவரைச்செடிகள் நீரில் மூழ்கின. இதனால் துவரம்பருப்பு சாகுபடி குறைந்து மற்ற மாநிலங்களில் வரத்து சரிந்துள்ளது.
இதனால் துவரம் பருப்பின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம்பருப்பு தற்போது 130 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.





