--- --:--:-- --

மேம்பாலத்தில் 30 அடி மேலிருந்து சீறிப்பாய்ந்து நொறுங்கிய கார்!

2

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சுமார் 30 அடி உயரத்திலிருந்து கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த கட்சிபோலி பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கடந்த 4ஆம் தேதி திறக்கப்பட்டது.

 

அதிவேகமாக சென்ற சிவப்பு நிற கார் வளைவில் திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி மேம்பாலத்தில் தடுப்பு சுவர்களை உடைத்துக் கொண்டு முப்பதடி உயரத்தில் இருந்தபடியே கீழே சாலையில் விழுந்தது. அப்போது கீழே பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

எனினும் கார் விழுந்ததில் பெண் ஒருவர் காருக்கு அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டியவர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் சேதமடைந்தன.

 

இந்த விபத்தை தொடர்ந்து அந்த மேம்பாலத்தில் வாகனங்களை இயக்க மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

அந்தப் பாலத்தின் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவே அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் இதுவே விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon