--- --:--:-- --

பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவை வாயில் திணித்து கொலை

3

பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவை வாயில் திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் அழுகையை அடக்க முயற்சித்து ஒரு கொலைக்கு பெற்றதாயை காரணமாக இருக்கிறார். வாலாஜாபேட்டை திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் அம்மு என்கிற பவித்ரா.

 

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் வாலாஜாபேட்டை வன்னிமேடு பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர், பவித்ராவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கௌரி ஷங்கருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பவித்ராவை அவரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பவித்ரா குழந்தைகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில் பவித்ரா பணி முடிந்து வீடு திரும்பிய போது ஒன்றரை வயது மகள் மோனிகா அழுதுகொண்டிருந்தாள். குழந்தை மோனிகா நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்தார் பவித்ரா. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் குழந்தையின் வாயை துப்பட்டாவால் இறுக்கினார்.

 

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை மோனிகா மயங்கியது. அதிர்ச்சி அடைந்த பவித்ரா குழந்தையை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

தகவலறிந்து வந்த போலீசார் பவித்ராவை கைது செய்தனர். துப்பட்டாவால் வாயை மூடியதாகவும் குழந்தை இறந்துவிடும் என்று தமக்கு தெரியாது எனவும், கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார் பவித்ரா. பெற்ற தாயை குழந்தையின் வாயில் துப்பட்டாவை திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon