--- --:--:-- --

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகள் மீட்க விவசாயி உருவாக்கியுள்ள நவீன கருவி

11

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி முத்துக்குமார் என்பவர் நவீன கருவியை உருவாக்கியுள்ளார்.

 

மணப்பாறை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே குலுக்கியது. இதன் எதிரொலியாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை 30 நொடிகளில் காப்பாற்றும் கருவியை ஒட்டன்சத்திரம் அருகே ஸ்ரீரங்கம் புதூரை சேர்ந்த விவசாயி முத்துக்குமார் உருவாக்கியுள்ளார்.

 

மின்மோட்டார் மூலம் இயங்கும் கியர் செயினை பயன்படுத்தி மற்றொரு கியரை இணைத்து ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கையை கவ்வி பிடிக்கும் வண்ணம் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் கேமரா, ஆக்சிஜன் குழாய் ,மின்விளக்கு உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon