--- --:--:-- --

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு நாளை ஆபரேசன்..! சில நாட்களுக்கு ஓய்வு அறிவிப்பு!!

images (2)

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு நாளை காலில் ஆபரேசன் நடைபெற உள்ளதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகப் போகிறது என்ற அறிவிப்பால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. அதிலும் நடிகர்கள் கமலும், ரஜினியும், தமிழர்களின் நலனுக்காக தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என்று கூறியிருப்பது கடந்த இரு நாட்களாக பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சை காரணமாக கமல் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் துணைத் தலைவர் டாக்டர் .சி.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-ல் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் கமலின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் டைட்டேனியம் உலோகக் கம்பி பொருத்தப்பட்டிருந்தது.

 

கமல் இடைவிடாது தொடர்ந்து அரசியல் மற்றும் சினிமா பணிகளில் ஈடுபட்டிருந்ததால், டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை அறுவை சிகிச்சை மூலம் டைட்டேனியம் கம்பி அகற்றறும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல் நம்மை சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon