--- --:--:-- --

நியூசிலாந்தில் உயிரிழந்த மேலூர் இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

9

நியூசிலாந்தில் உயிரிழந்த மேலூர் இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரிபட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பாலமுருகன் .கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். அங்குள்ள நண்பர் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாலமுருகனின் இறப்பை கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

இறந்த பாலமுருகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon