--- --:--:-- --

தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

10

நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்தது. ஆனால் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

 

 

எதிர்பார்க்காத அளவில் தங்கம் விலை கூடியும் குறைந்தும் வருவதால் நகை பிரியர்கள் குழப்படைந்தனர். இந்த நிலையில் தான் இரண்டு நாட்களுக்கு பின் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, நேற்று (நவம்பர் 25) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420க்கும், சவரனுக்கு ரூ.2360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 2360 விலை குறைந்தது.

 

 

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் ரூ.12,215க்கும், சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ஒரு சவரன் ரூ.97,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,540க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,440க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 165க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon