7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!
திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளது.
மேலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.நாளை நீலகிரி மாவட்டம் மற்றும், கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





