மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய காசிமேடு சந்தை
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கக் கோரி, காசிமேடு மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், விடுமுறை நாளான இன்று மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இன்றி, எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் காசிமேடு மீன்பிடித் துறைமுகச் சந்தை முற்றிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




