நாமக்கல்லில் மாதம் 6 கோடி முட்டை ஏற்றுமதி பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மாதம் சுமார் 6 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியில் முழுமையான உயிர்ப் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை எனக் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




