டெல்டா விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் – தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.இந்த நிலை ஏற்படக்கூடும் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் – அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்! என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




