--- --:--:-- --

வாக்காளர் பட்டியலில் திருத்தம் – தமிழ்நாடு முழுவதும் இன்றும் சிறப்பு முகாம்

1

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் இன்றும் நடைபெற்று வருகிறது. .கடந்த 12 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி மாநிலம் முழுவதும் நேற்றும், இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. உத்திரமேரூர் தொகுதியில் நடைபெற்ற முகாமினை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார்.இதே போன்று, நெல்லை மாவட்டத்தில் காலை முதலே அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், முதல்முறை வாக்காளர்களும் உரிய சான்றிதழ்களுடன் முகாம்களுக்குச் சென்று விண்ணப்பித்தனர்.

 

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. நகராட்சி நிர்வாகம் போதிய விழிப்புணர்வு இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon