திருப்பரங்குன்றம் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஏற்ற வகையில் குழிவான அமைப்பு உள்ளது என்றும், அதில் நெய் ஊற்றி திரி வைத்து தீபம் ஏற்றலாம் என்றும் வழக்கின் மூல மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தமிழ்நாட்டின் மருதமலை, சுவாமிமலை, பழனி உள்ளிட்ட பிற மலைப்பகுதிகளிலும் இதுபோன்ற அமைப்பில்தான் தீபம் ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில், இன்றைய வாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணை நாளைக்கு (நவ.20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




