--- --:--:-- --

ஆளும் த.வெ.க. அரசு மீது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கடும் விமர்சனம்

6

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் செயல்பாடுகளை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் இன்று காலை கடுமையாக விமர்சித்துள்ளனர். புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் அரசு மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மறுபுறம், த.வெ.க. ஆட்சியாளர்கள் ‘ரீல்ஸ்’ மோகத்தில் மக்களின் உயிரோடு விளையாடுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரின் நள்ளிரவு காவல் நிலைய ஆய்வு மற்றும் சோத்துப்பாறை அணையை த.வெ.க. நிர்வாகிகள் திறந்து வைத்தது போன்ற நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், முதலமைச்சரைப் புகழ்ந்து ‘அரோகரா’ கோஷம் எழுப்பப்படுவது பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இதற்கிடையே, முதலமைச்சர் விஜய் பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காகத் திருச்சிக்குச் செல்லவுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon