திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நில அளவைக் கல்லுக்கும் மதச் சாயம் பூசப்படும் சூழல் உருவாகும் என தமிழக அரசு தனது மனுவில் கவலை தெரிவித்துள்ளது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




