--- --:--:-- --

தமிழகத்தின் 2,221 சாலைப் பணிகளுக்கு ரூ.6,513 கோடி நிர்வாக அனுமதி

4

தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் தமிழக அரசு ரூ.6,513 கோடி நிதிக்கு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 2,221 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

 

 

பருவமழையால் சேதமடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து இணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தொடர் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon