--- --:--:-- --

முதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை !

14

ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் முதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்த சேதுபாண்டி தனியார் வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

 

இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. ஜெயராணிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என கூறி அதே பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சேது பாண்டி வெளிநாட்டில் பணியாற்றியபோது அனுப்பிய பணத்தில் முதல் மனைவி ஜெயராணி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை விற்க சேதுபாண்டி முயன்ற போது அதற்கு ஜெயராணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த சேதுபாண்டி கத்தியால் கழுத்தை அறுத்து ஜெயராணி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சேதுபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon