அமைச்சர் வன்னி அரசுக்கு எதிராக புகார்!
பாதுகாக்கப்பட்ட முதுமலை வனப் பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அமைச்சர் வன்னி அரசு மீது அண்ணாமலையின் We The Leaders அமைப்பினர் தேசிய புலிகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி முதுமலை வனப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் வன்னி அரசு, தனது குடும்பத்தினருடன் பொக்காபுரம் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது, வனத்துறைக்குச் சொந்தமான வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தபடியும், வனப்பகுதிக்குள் புலியைப் பார்த்தபோது, பாதுகாப்பற்ற முறையில் அதை நோக்கி ஓடியது போன்றவற்றை வீடியோவாக எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதுமலை வனப்பகுதிக்குள் வாழும் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வனத்துறையினர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நிலையில், வனத்துறை விதிமுறைகளை அமைச்சர் மீறியுள்ளதாகவும், இதற்கு வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு அனுமதி அளித்தனர் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வனப்பகுதிக்குள் அமைச்சரை வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு அழைத்துச் சென்றனர், அவர் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக விசாரிக்கக் கோரி தேசிய புலிகள் ஆணையத்திற்கு We The Leaders அமைப்பைச் சார்ந்த நிர்வாகி விக்ரம் என்பவர் இமெயிலில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




