சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு.!
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. வரும் செவ்வாய்க்கிழமையன்று, கார்த்திகை ஒன்றாம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை தற்போதைய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இன்று திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து, வரும் 17 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். டிசம்பர் 27 ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்று அன்றுடன் நடை அடைக்கப்படுகிறது.
இதையடுத்து, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் மகரவிளக்குத் திருவிழாவிற்காக, டிசம்பர் 30 ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். இதனிடையே, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





