--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்!

3

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்கிறார். ‘Belonging: A Journey of Love’ என்ற தலைப்பில் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

 

 

இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று பகல் 1 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை 6 மணி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரவு 11.45 மணிக்கு சென்னை திரும்புகிறார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ள நிலையில், விஜயின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

அதாவது காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon