--- --:--:-- --

மீண்டும் தங்கம் விலை சரிவு..!

1

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களுமே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. 5 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.12,615க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.12,540க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.10,265க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.82,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.190க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon