--- --:--:-- --

நேட்டோவில் இணைய டான்பாஸை விட்டுக்கொடுக்க வேண்டுமா? அமெரிக்காவின் நிபந்தனைக்கு ஜெலன்ஸ்கி பதில்

5

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் புதிய திருப்பமாக, உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய வேண்டுமானால் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா முதல்முறையாக முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இதுகுறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைனின் எந்தவொரு நிலப்பரப்பையும் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்கவோ, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நிலப்பரப்பாக அங்கீகரிக்கவோ உக்ரைன் ஒருபோதும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

 

அதேசமயம், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பின் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன், அந்நாட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதற்கான ஆதரவு மற்றும் நாட்டை மறுகட்டமைப்பதற்கான நிதியுதவி உறுதி செய்யப்பட்டால், டான்பாஸ் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து உக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon