--- --:--:-- --

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு: சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடக்கம்

4

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்து, காவலர்கள் பழனிவேல் ராஜன் மற்றும் கலைச்செல்வி ஆகிய மூவருக்கும் சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்; இதற்கிடையே, உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon