--- --:--:-- --

புத்தகக் கொள்முதல் முறைகேடு: அண்ணா நுற்றாண்டு நூலக அதிகாரிகள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

1

புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து, நூலகத் துறை அதிகாரிகள் 5 பேரைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரிகள் காமாட்சி மற்றும் சந்தான கார்த்திகேயன், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அதிகாரிகள் தினேஷ்குமார் மற்றும் சந்தான கிருஷ்ணன் (பெரியார் நூலகப் பொறுப்பாளர்) மற்றும் பொது நூலகங்கள் இயக்குநரக அதிகாரி ஜூலியட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

புத்தகக் கொள்முதல் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த இவர்கள் ஐவர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon