--- --:--:-- --

தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?

6

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

 

 

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அகல் விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட மூன்று பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 4 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

இதனைக் கேட்ட நீதிபதிகள், அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க யார் அனுமதி வழங்கினார்கள் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா என வினவினர். அகல் விளக்கு பதிப்பகத்திற்கு இதற்கு முன் புத்தகம் வெளியிட்ட அனுபவம் உண்டா?, அந்த பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்க பரிந்துரைத்த நபர் யார் என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.

 

 

அதைத்தொடர்ந்து இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்தும், பதிவு செய்யப்பட்ட FIR குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோவை பெரியார் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 200 அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் 93 பினிக்ஸ் பப்ளிகேஷன் புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon