--- --:--:-- --

காவ்யா மாறன் திருமண கொண்டாட்டம் புகைப்படங்கள்!

3

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண விழா, கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. இல்லற வாழ்வில் இணைந்துள்ள ஜோடிக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘3’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓவர் நைட்டிலேயே உலகப் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். இன்று இவரது இசையில்லாத டாப் நடிகர்களின் படங்களே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார் அனிருத்.

 

இந்நிலையில் இவருக்கும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் அணியின் சீஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுவெளியில் பெரிதாக அறிவிக்கப்படாவிட்டாலும் கடந்த பல மாதங்களாகவே இவர்கள் குறித்த தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில்தான் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் அண்மையில் வெளியானது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அனிருத் பாடலாகவே பாடி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்.

 

 

இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதியான நேற்று, இயற்கை அழகுக்கும், தொன்மையான வரலாற்றுக்கும் பெயர் பெற்ற ஐரோப்பிய நாடான கிரீஸில் இந்த ஜோடிக்கு மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. வானுயர்ந்த மலைகள், நீண்ட கடற்கரைகள், நீல நிறக் கடல், இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு என டெஸ்டினேசன் வெட்டிங்குக்கான இளைஞர்களின் தேர்வாக உள்ள கிரீஸில் காவ்யாவைக் கரம்பிடித்ததை அனிருத் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்தார். “தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும், ஆனால் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும் ஒன்று” என குறிப்பிட்டு அனிருத் பகிர்ந்த அந்த நெகிழ்ச்சிப் பதிவு இணையத்தை ஆக்கிரமித்தது.

 

சென்னையில் வரும் 21ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெறவுள்ளதால், கிரீஸில் நடைபெற்ற திருமண விழாவில், மிக நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே பங்கேற்றனர். அதாவது, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் உற்சாகமாக நடனம் ஆடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. திருமண பந்தத்தில் இணைந்துள்ள அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon