--- --:--:-- --

மும்பை இண்டியன்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விலகல்!

3

மும்பை இண்டியன்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். சென்னை அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அவரை வாங்கியுள்ளது. 2027-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மும்பை இண்டியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம், ரூ.18 கோடிக்கு ஹர்திக் பாண்டியா விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

 

 

அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட இருவரும் ரூ.18 கோடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 2027-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்து வருகின்றனர்.

 

 

இதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 15-ம் தேதியுடன் முடிகிறது. நிறைய அணிகள் வீரர்களை தக்கவைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.டிரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு மாறியிருப்பதால், இனி வரும் காலங்களில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார். அதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

 

ஹர்திக் பாண்டியாவும், ரோகித் சர்மாவும் ஒரே அணியில் இடம்பெற்றிருந்தது கடந்த காலங்களில் மைதானத்திலும், வெளியிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு மாறுவார் என மும்பை இண்டியன்ஸ் அணி ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது அந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என கடந்த ஒரு மாதமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon