தலைகீழாக சரிந்தது தங்கம் விலை..!
அமெரிக்க தேர்தல் எதிரொலியாக தங்கம் விலை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,385க்கும், சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,680 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று தன்தேராஸ் என்பதால் நகை வாங்க சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கும் சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.10,760க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.86,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் அதே போல கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




