--- --:--:-- --

3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான மளிகை தொகுப்பு..!

3

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.700 மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்களுக்கு தேவையான 5 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

 

தீபாவளி சிறப்புத் தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 வகையான பொருட்கள் வழங்கப்படும். இந்தப் பொருட்கள் அனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

 

மேலும், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon