--- --:--:-- --

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்..!

5

சென்னை மாநகராட்சியில் அபராதமின்றி சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் நாளை முதல் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கு முதல் அரையாண்டுக்கு செப்டம்பர் 30 வரையும், இரண்டாவது அரையாண்டுக்கு மார்ச் 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்த தவறும் பட்சத்தில், அக்டோபர் 1 முதல், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி, நிலுவைத் தொகைக்கு தனி வட்டி வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரியைச் செலுத்தவில்லை என்றால், அதற்கு மாதத்திற்கு 1% எளிய வட்டி (Simple Interest) அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

ஒவ்வொரு அரையாண்டும் தொடங்கிய முதல் 30 நாட்களுக்குள் (அதாவது ஏப்ரல் 30 மற்றும் அக்டோபர் 30-க்குள்) சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால் 5% தள்ளுபடி (அதிகபட்சம் ₹5,000 வரை) ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் இன்றுக்குள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon