--- --:--:-- --

சினிமா ஆர்வம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்வு!

2

சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் நடித்துள்ள இந்தப் படம் அக்.2 திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்த்திகைச்செல்வன் உடனான ‘Disco With KS’ நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

 

தனது சினிமா ஆர்வம் எப்படி தொடங்கியது என்பது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு 18, 19 வயது இருக்கும். அப்போதே கதை சொல்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். நிஜ சம்பவம் ஒன்றை என்னுடைய நண்பர்களிடம் விவரித்தேன். அப்போது நான் அதை விவரிக்கும்போது, அவர்களும் அந்த சம்பவத்திலேயே இருப்பது போல உணர்ந்தார்கள்.

 

 

அதன் பிறகு என் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கற்பனை கலந்து எழுத தொடங்கினேன். அப்படி தொடங்கியது தான் சினிமா ஆர்வம். எவ்வளவு நாள் தான் கதையை பேப்பர், பேனாவில் எழுதிக் கொண்டிருப்பது என யோசித்து அதை குறும்படம் ஆக்கினேன். ஆக அங்கிருந்து தான் எனக்கு எல்லாமே தொடங்கியது. என்னுடைய ஆர்வம் முழுவதும் இதை சுற்றியே இருக்கிறது என தெரிந்த பிறகு, அதை பின் தொடர ஆரம்பித்தேன். ‘வேட்டைக்காரன்’ படத்தில் நான் அப்பாவுடன் பாடலில் நடித்த போது 8 வயது தான். அப்போது சினிமாவுக்கு வருவேன் என நினைக்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon