தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு செப். 25-ம் தேதியே ஊதியம் வழங்க உத்தரவு
செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நாளையே (செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை) முன்னதாகவே வழங்கிடத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், ஊழியர்களின் நலன் கருதி நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




