சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சாஹி இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக பதவி விலகினார்.
அதனையடுத்து உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக வினித் கோத்தாரி நியமிக்கப்பட்டார். இதுபோன்ற சூழலில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி. சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
அதன்படியே ஏ.பி. சாஹி இன்று பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.






