கோயில் சொத்துகள் விவரங்களை வெளியிட உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகள் மற்றும் குத்தகைதாரர் விவரங்களை 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவரங்களை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயில் சொத்துகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விவரங்களை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




